Press "Enter" to skip to content

சிஏஏவுக்கு எதிராக ராப் பாடல் பாடிய இளைஞர் – நேரில் அழைத்து பாராட்டிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ராப் பாடல் பாடிய அறிவு என்ற இளைஞரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.
 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு பகுதியாக சென்னையைச் சேர்ந்த அறிவு என்ற இளைஞர் தனிமனித ராப் பாடல் மூலமாக தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார். இந்தப் பாடலை தெருக்குரல் என்ற பெயரில் வாரம் ஒருநாள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாடி வந்துள்ளார்.

கடந்த வாரம் செம்மொழி பூங்கா அருகே இவர் பாடிய இந்த பாடலை இணையதளம் வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார். மேலும் அந்தப் பாடலைப் பாடிய இளைஞரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார் ஸ்டாலின்.

மேலும், ஓராண்டு முரசொலி மலரை அந்த இளைஞருக்கு நினைவுப் பரிசாக ஸ்டாலின் வழங்கினார். திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக தனது கையொப்பத்தை பதிவு செய்த இளைஞர் அறிவு, ஒரு மிகப்பெரும் இயக்கத்தின் தலைவர் தன்னை அழைத்து பாராட்டியதால் இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »