Press "Enter" to skip to content

டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு முதல் ஜூனியர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை… #TodayTopNews

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 61.46% வாக்குகள் பதிவு. வரும் 11ஆம் தேதி நடைபெறுகிறது வாக்கு எண்ணிக்கை.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளிலும் தகவல்.
குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்தது சிபிசிஐடி. வதந்திகளைப் பரப்புவோருக்கு டிஎன்பிஎஸ்சி கண்டனம்.

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் உறுதி. பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்றே 5 மற்றும் 8 வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும் முதல்வர் விளக்கம்.
தமிழகத்தில் வாக்கி டாக்கி உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு என புகார். காவல் துறை அதிகாரிகள் வீடுகளில் சோதனை, 14 பேர் மீது வழக்குப் பதிவு.
கணக்கில் காட்டப்படாத 165 கோடி ரூபாய் வருவாய்க்கு வரி செலுத்த பைனான்சியர் அன்புச்செழியன் ஒப்புதல். 4 நாட்கள் சோதனையைத் தொடர்ந்து வருமானவரித்துறை தரப்பில் தகவல்.

இலங்கை தமிழர் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு விரைந்து மேற்கொள்ளும் என டெல்லி வந்துள்ள பிரதமர் ராஜபக்சவை சந்தித்து பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை.
தாய்லாந்தில் வணிக வளாகத்தில் புகுந்து ராணுவ வீரர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 20பேர் உயிரிழப்பு. பணயக் கைதிகளாக சிக்கியவர்களை மீட்கும்பணியில் பாதுகாப்புப்படையினர் தீவிரம்.
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் இன்று மோதல்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »