Press "Enter" to skip to content

இனி பட்டா மாறுதலுக்கு தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை…!

பத்திரப் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்தப் பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கான படிவத்தை வருவாய்த் துறைக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் தரும் ஒப்புகை சீட்டை வைத்து தாலுகா அலுவலகத்தை அணுகினால் பட்டா பெயர் மாற்றம் செய்துத்தரப்படும்.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத் திருத்தம் செல்லும்: உச்சநீதிமன்றம்
ஆனால், அது உடனடியாக நடைபெறாமல் சர்வே எண் சரி பார்க்க வேண்டும், மூல ஆவணம் பார்க்க வேண்டும் எனக்கூறி பல்வேறு அலைக்கழிப்புக்கு பின்னரே கிடைக்கிறது என கூறப்படுகிறது. பல்வேறு காரணங்களை கூறி பட்டா மாறுதல் செய்து தராமல் தாலுகா அலுவலகத்திலும் இழுத்தடிப்பு நடைபெறுவதாக புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில், பத்திரப் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து, வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வருங் காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துகள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு விடும் எனவும் சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் இருக்கிறது இந்த கொரியத் திரைப்படத்தில்?: ஆஸ்கர் விழாவில் வரலாறு படைத்த பாராசைட்!
இதன் மூலம் மக்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது எனவும் சார்பதிவாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
Source: PuthiyaThalaimurai

More from தமிழகம்More posts in தமிழகம் »