Press "Enter" to skip to content

மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டம் 2024 – முக்கியத் தகவல்கள்

பட மூலாதாரம், ANI

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து வருகிறார்.

பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை பட்டியலிட்டு தனது உரையைத் துவங்கியுள்ளார்.

ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகியோரது வாழ்வாதாரத்தையும் நலனையும் முக்கியமானவையாகக் கொண்டு இந்த அரசு செயலாற்றி வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

25 கோடி மக்களை பலமுனை ஏழ்மையிலிருந்து வெளிக்கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் இந்த அரசின் குறிக்கோள் என்ற அவர், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எரிவாயு, மின்சாரம், வங்கிச் சேவைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றும், இதனால் கிராமப்புற மக்களுக்கு வருமானம் உயர்ந்துள்ளது என்றும் சொன்னார்.

மெலும், சமூக நீதி முன்பு அரசியல் கோஷமாக இருந்தது, ஆனால் இந்த அரசுக்கு அது அடிப்படை நிர்வாகம் சார்ந்தது என்றார் சீதாராமன். “இது தான் செயல்பாட்டு மதச்சார்பின்மை. இது ஊழலைத் தடுக்கிறது,” என்றார்.

34 லட்சம் கோடி ரூபாயை மக்களின் ஜன்தன் கணக்குகளில் செலுத்தியதன்மூலம் 2.7 லட்சம் கோடி ரூபாய் நிதி வீணாவது தடுக்கப்பட்டிருக்கிறது, என்றார்.

முன்னர், வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்வதன் மரபின்படி, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.

பின்னர், சிவப்புத் துணியால் ஆன பையில் காகிதமில்லா மின்னணு வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டு அவர் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம் என்பது, தேர்தலுக்கு அடுத்து வரும் அரசு அடுத்த வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்வது வரையிலான காலத்திற்கான வரவு செலவுத் திட்டம்.

மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டம் 2024

பட மூலாதாரம், X/President of India

இந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதன்மூலம், முன்னர் ஐந்து முறை ஆண்டு வரவு செலவுத் திட்டம் மற்றும் ஒரு இடைக்கால வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிகர் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் புதன்கிழமை (ஜனவரி 30) அன்று துவங்கியது. இரு அவைகளும் இணைந்த கூட்டத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் துவங்கிவைத்தார். அதில், இந்தியா தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு 7.5% வளர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.

மத்திய இடைக்கால வரவு செலவுத் திட்டம் 2024

பட மூலாதாரம், ANI

விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் வரவு செலவுத் திட்டம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப் படுகிறது)

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »