Press "Enter" to skip to content

யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..!

மும்பை: இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக் லிமிடெட் கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா.

கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளி விவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இருந்தவர்.

பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24% பங்குகளை வைத்துள்ள ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி செய்து வருகிறார்.

ஒரு பட்டியிடலிடப்பட்டிருக்கும் பங்கு சந்தையில், பட்டியிடப்பட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருப்பவர், அந்த நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிக்கக் கூடிய அல்லது பாதிக்கக் கூடிய சில விஷயங்கள் என உள்ளிட்ட சில விஷயங்களை நிறுவன அதிபர்களோ, மேலிருந்து கீழ் வரை உள்ள நிறுவன ஊழியர்களோ, அவர் தம் உறவினர்களோ, நண்பர்களோ, அல்லது நிறுவனம் வெளியில் தொடர்பு வைத்திருக்கும் தணிக்கை நிறுவனம் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் இவர்களுக்கு கிடைக்கும் விவரங்களை வைத்து அவர் முன் கூட்டியே பங்குகளை வாங்கி லாபம் பார்ப்பது அல்லது பங்குகளை விற்று நஷ்டம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடவது இன்சைடர் டிரேடிங் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பில்லியனர் முதலீட்டாளர் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா அவருக்கும் குடும்பத்திற்கும் சொந்தமான கல்வி நிறுவனமான கல்வி நிறுவனமான ஆப்டெக் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளில் உள் வர்த்தகம் செய்ததாக செபியால் விசாரிக்கப்படுகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் பங்குதாரர்களாக இருக்கும் மற்ற குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ரமேஷ், எஸ் தமானி மற்றும் இயக்குனர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில குழு உறுப்பினர்களையும் பங்கு சந்தை கட்டுப்பாட்டாளர் விசாரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் இவ்வாறு இன்சைடர் வர்த்தகம் நடந்ததாக கூறப்படும் நிலையில், அது எப்போது மேற்கொள்ளப்பட்டது போன்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் ராகேஷ் ஜூன் ஜூவாலவைத் தவிர, அவரது மனைவி ரேகா, அவரது சகோதரர் மற்றும் அவரது மாமியார் சுஷிலா தேவி குப்தா உள்ளிட்ட சிலர் செபியால் ஜனவரி 24 அன்று விசாரனைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மும்பையில் உள்ள ஒழுங்குமுறை ஆணையத்தில் குறைந்தது இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ராகேஷ் தவிர, அவரின் சகோதரி சுதா குப்தாவும் ஜனவரி 23ம் தேதி விசாரனைக்கு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதே போல் ரேர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான உத்பால் ஷெத்தும் ஜனவரி 28ம் தேதியன்று ஆஜராகும் படி கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ப்ளும்பெர்க் மதிப்பிடுகளின் படி, ஜூன் ஜூன்வாலா இந்தியாவின் வாரன் பபெட் என்றும் கூறப்படுகிறது. நாட்டின் பணக்கார முதலீட்டாளர் ஒருவர் கிட்டதட்ட 11,140 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளார். கடந்த 2005ல் ஆப்டெக்கில் 56 ரூபாய்க்கு ஒரு பங்கை வாங்கிய நிலையில், கடந்த திங்களன்று இந்த பங்கின் விலை 173 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

கடந்த ஏப்ரல் 2016-ல் ஜியோமெட்ரிக் என்கிற நிறுவனத்தை ஹெச்சிஎல் நிறுவனம் வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாவதற்கு முன்பே ஜுன்ஜுன்வாலாக்கு தனிப்பட்ட முறையில் இது தெரிய வர, மனுசன் தன்னுடைய பங்கை ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவனத்தில் 19% அதிகரித்துக் கொண்டாராம். இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் 43 ஜியோமெட்ரிக் லிமிடெட் நிறுவன பங்குகளுக்கு 10 ஹெச்சிஎல் நிறுவன பங்குகள் வழங்கியுள்ளார்கள்.

ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவன பங்கை வாங்கிக் குவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஜியோமெட்ரிக் நிறுவனத்தில் 19% வரை பங்குகளை வாங்கிப் போட்டாதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் ஜுன்ஜுன்வாலாக்கு பெரிய லாபம் சட்ட விரோதமாக கிடைத்திருப்பதாக அப்போது செபி விசாரிக்க ஆரம்பித்தது. இந்த விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தான் ஜுன்ஜுன்வாலா, அந்த குற்றச் சாட்டை ஒப்புக் கொள்ளும் விதத்தில் 2.48 லட்சம் ரூபாய் அபராதத் தொகையாக செபி அமைப்புக்கு செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »