Press "Enter" to skip to content

கொரோனாவின் கோரத்தாண்டவம்.. 100க்கு மேற்பட்டோர் பலி.. 2000 கடைகளை மூடிய விண்மீன்பக்ஸ்..!

சீனாவில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவின் கொடூரத்தால் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் 4,000 பேரை இந்த நோய் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சீனா பொருளாதார ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ன.

இந்த நிலையில் அமெரிக்காவின் கார்ப்பரேட் நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனம், சீனாவில் உள்ள தனது 2000 சிற்றுண்டி கிளைகளை மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் படு வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோடி அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்.. 5 ஆண்டுகளில் நாட்டின் கடன் 71% அதிகரிப்பு..!

கிளைகள் மூடல்

கிளைகள் மூடல்

சர்வதேச அளவில் உள்ள மிகப்பெரிய காஃபி செயின் நிறுவனமான இது கடந்த நிதியாண்டில் சிறந்த செயல்பாட்டின் காரணமாக மிக நல்ல காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சீனாவில் 4,292 கடைகளை கொண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது 2000 கடைகளை மூடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நிதி ரீதியிலான தாக்கம்

நிதி ரீதியிலான தாக்கம்

கொரோனாவின் தாக்கத்தால் இந்த நிறுவனம் நிதி ரீதியிலான தாக்கத்தை எதிர்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. மேலும் இந்த இழப்பானது மூடப்பட்ட இந்த கிளைகள் எத்தனை நாட்கள் மூடப்படும் என்பதை பொறுத்து தான் நிதி ரீதியிலான தாக்கம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக இந்த கிளைகள் எத்தனை நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும், அதிலும் தற்போது பாதிக் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், இனி எத்தனை கடைகள் மூடப்படும், நிலைமை எப்போது சீரடையும் என்றும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். இன்னும் எவ்வளவு கடைகளை மூட வேண்டியிருக்கும் என்ற பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.

நிதி ரீதியிலான பாதிப்பு

நிதி ரீதியிலான பாதிப்பு

நிதி பாதிப்பு என்னவாக இருக்கும் என்பது மார்ச் மாதத்திற்கு முன்பு தெரியாது. எனினும் வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் நீண்ட கால இலக்கு அப்படியே தான் உள்ளது என்றும் அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சீனா நகரான வுகானில் தோன்றிய இந்த கொடிய தொற்றுதலால், உலகம் முழுவதும் தற்போது பரவி வரும் நிலையில், பல நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன.

சுகாதார துறைக்கு ஆதரவு

சுகாதார துறைக்கு ஆதரவு

ஸ்டார்பக்ஸ் எங்களது கூட்டாளார்களை பாதுகாப்பதற்கும், சுகாரதார அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தை ஆதரிப்பதற்காகவும் ஒரு சிந்தனை மிக்க மற்றும் பொறுப்பான முறையில் இந்த சுகாதார அபாயத்தை கட்டுப்படுத்த அவர்கள் செயல்படுகிறார்கள் என்றும் அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

போட்டியாளர்களை சமாளிக்க நடவடிக்கை

போட்டியாளர்களை சமாளிக்க நடவடிக்கை

சீனாவில் குறைந்தது 13 மாதங்களுக்கும் மேலாக திறந்திருக்கும் உணவகங்களில் விற்பனை 3% உயர்ந்தது. அங்கு அதன் போட்டியாளர்களை போல மலிவான பானங்களை வழங்குவதற்கான ஒரு மூலோபாயத்தை பின்பற்றுவதை விட தனிப்பயனாக்கப்பட்ட பானங்கள் மற்றும் அதன் டிஜிட்டல் உந்துதலில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றும் இந்த நிறுவனத்தின் தலைவர் ஜான்சன் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »