Press "Enter" to skip to content

தங்கம் விலை சவரன் ரூ.296 சரிவு – வெள்ளி கிலோ ரூ.2000 சரிவு

தங்கம் விலை கடந்தவாரம் உயர்ந்து வந்த நிலையில், இந்தவாரம் குறைந்து கொண்டே வருகிறது. சென்னை, தங்கம் வெள்ளி சந்தையில் இன்று(ஜன.,29) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒருகிராம் ரூ.37 சரிந்து, ரூ.3,838-க்கும், சவரன் ரூ.296 சரிந்து ரூ.30,704க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.390 குறைந்து ரூ.40,300க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2 குறைந்து ரூ.49க்கும், கிலோ ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.49,000க்கு விற்பனையாகிறது.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »