Press "Enter" to skip to content

தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..!

கொரோனோ வைரஸ் தாக்குதலால் சீனாவே அதிர்ந்து போயுள்ள நிலையில், தற்போது மற்ற உலக நாடுகளுக்கு பரவலாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி காணக்கூடுமோ என்ற பதற்றத்தினால் தங்கம் விலை கடந்த வாரம் சற்று ஏற்றம் கண்டு வந்தது.

இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் 10 கிராம் தங்கத்தின் விலை சுமார் (எம்சிஎக்ஸ்) 500 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.

பிப்ரவரி மாத ப்யூச்சர் கான்டிராக்டில் உள்ள தங்கத்தின் விலையானது நேற்றை அமர்வில் 0.42% வீழ்ச்சி கண்டு 40,073 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

imageகொரோனாவின் கோரத்தாண்டவம்.. 100க்கு மேற்பட்டோர் பலி.. 2000 கடைகளை மூடிய ஸ்டார்பக்ஸ்..!

இன்று காலையில் 40,111 ரூபாயாக தொடங்கிய தங்கம் விலை, இன்று அதிகபட்சமாக 40,150 ரூபாய் வரை சென்று தற்போது 40,141 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. ஆக மொத்தம் இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலையானது 500 ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது. இதோடு வெள்ளி விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் தற்போது 45,512 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இதே சர்வதேச சந்தையில் தற்போது அவுன்ஸுக்கு 1565.75 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கடந்த திங்கட்கிழமையன்று அதிகபட்சமாக 1.588.40 டாலராகவும் வர்த்தகமாகியது. இதே இன்று 1562.35 டாலர்களாகவும் குறைந்த பட்சமாக வர்த்தகமாகியுள்ளது.

இதே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது, ஒரு கிராம் 3,873 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 30,984 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை வீழ்ச்சியா.. அதுவும் 500 ரூபாயா.. இன்னும் குறையுமா..!

கொரோனா வைரஸின் தாக்கம் மற்றும் அமெரிக்கா ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் வரவிருக்கும் பணவியல் கொள்கை அறிவிப்பில் வர்த்தகர்கள் கவனம் செலுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கம் விலையில் இதன் எதிரொலி இருக்கலாம் என்றும் எதிர்பார்கப்படுவதாக அபான்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான அபிஷேக் பன்சால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சீனாவில் கொரோனா வைரஸால் 100 மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்த கவலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. இது தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கும் என்றும், தங்கத்தில் முதலீடுகளை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தங்கம் விலையானது கடந்த ஆண்டில் 18% அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டில் இதுவரை சர்வதேச சந்தையில் 3% அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவினைப் பொறுத்தவரையில் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையில் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »