Press "Enter" to skip to content

இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்)..!

சீனாவின் கொரோனா வைரஸால் 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இதன் பாதிப்பு இன்னும் எந்த அளவுக்கு இருக்குமோ என்ற பயத்தினால் முதலீட்டாளர்கள், தங்களது முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர்.

இதனால் கடந்த அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்த குறைந்தபட்ச விலையை தொட்டுள்ளது.

சொல்லப்போனால் கடந்த ஐந்து வர்த்தக தினங்களில் மட்டும் 9% வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம்

சீனா அதிகாரிகள் சீனாவின் வுகானில் வெடிப்பின் மையப்பகுதிகளில் 50 மில்லியன் மக்களுடன் நகரில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இது ஹாங்காங்கிற்கு பயணிக்கும் நபர்களை இது தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது இறப்புகளை 106 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர ஆசியா மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இதன் தாக்கம் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

மேலும் சீனாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களையும் தவிர்க்குமாறும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் பயணிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் கச்சா எண்ணெய் தேவை குறையலாமோ என்ற கருத்தும் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

தற்போது விலை

தற்போது விலை

இதற்கிடையில் வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் கச்சா எண்ணெய் விலை 1.07% அதிகரித்து தற்போது 54.05 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில தினங்களாக வீழ்ச்சி கண்டு வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதே பிரண்ட் கச்சா எண்ணெய் விலையானது 59.37 டாலராக வர்த்தகமாகி வருகிறது.

விமான போக்குவரத்து சரிவு

விமான போக்குவரத்து சரிவு

வுஹானுக்கு மிக நெருக்கமான ஐந்து விமான நிலையங்களில் விமான நடவடிக்கைகள் முந்தைய வாரத்தினை விட 48% வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷாங்காய் மற்றும் ஷென்சென் விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து வெகுவாக சரிந்ததாக கூறப்படுகிறது. சந்திர புத்தாண்டு விடுமுறைகள் அதை அதிகரித்திருக்க வேண்டும் என்றாலும், ஆனால் மாறாக அப்படி ஏதும் நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விமானங்களில் பயன்படுத்தும் எரிபொருள் அளவும் வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேவை வீழ்ச்சி

தேவை வீழ்ச்சி

ஆசியாவில் எரிபொருள் ஜெட் எரிபொருளை உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் லாபம் கிட்டதட்ட 4 ஆண்டுகளில் மிக மிகக் குறைவே. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று சாதகமான சந்தை நிலவரம் இருந்த போதிலும், சீனாவின் கொரோனா வைரஸ் அச்சங்கள் உண்மையில் எவ்வளவு தேவை அழிவை ஏற்படுத்தும், அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று ஸ்டீவ்ஸ் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »