Press "Enter" to skip to content

Budget 2020: அரசு எதிர் கொள்ள இருக்கும் வரவு செலவுத் திட்டம் சவால்கள்..!

இன்னும் சில நாட்கள் தான்… 2020 – 21 நிதி ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்துவிடுவார் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த ஒரு பட்ஜெட், அடுத்த ஒரு வருடத்தில், பலரின் தலையெழுத்தை நேரடியாகவும், மறை முகமாகவும் மாற்றிவிடும்.

இந்த 2020 – 21 புதிய பட்ஜெட்டில், நம் நிதி அமச்சர் என்ன மாதிரியான சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த கச்சா எண்ணெய் விலை.. காரணம் கொரோனா வைரஸ்..!

தொழில் துறை

தொழில் துறை

முதலில் தொழில் துறையில் இருந்து தொடங்குவோம். கடந்த சில மாதங்களில் கொஞ்சம் பலத்த சரிவைக் கண்ட இந்திய தொழில் துறை உற்பத்தி, கடந்த நவம்பர் 2019-ல் 1.8 சதவிகிதமாக கொஞ்சம் தேறி இருக்கிறது. இதோடு எட்டு முக்கிய தொழில் துறைகளின் உற்பத்தியும் கடந்த நவம்பர் 2019-ல் வெறும் 1.5 சதவிகிதம் தான் வளர்ச்சி கண்டு இருக்கிறது.

விலை வாசி

விலை வாசி

அன்றாட மக்களை அதிகம் பாதிக்கும் சிபிஐ என்று சொல்லப்படுகிற நுகர்வோர் பணவீக்கம் கடந்த டிசம்பர் 2019-ல் 7.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. அதே போல டபிள்யூ பி ஐ பணவீக்கம் (WPI Inflation) என்று சொல்லப்படுகிற மொத்த விலைப் பணவீக்கக் குறியீடும் கடந்த டிசம்பர் 2019-ல் 2.59 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது.

வேலை இல்லா திண்டாட்டம்

வேலை இல்லா திண்டாட்டம்

இதை எல்லாம் விட, இன்றைய இந்திய இளைஞர்களுக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும், வேலை இல்லா திண்டாட்டம், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இந்த பிரச்னையை மத்திய அரசு சமாளிக்க தலை கீழாக நின்று தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பிரச்னை இதுவரை தீர்ந்த பாடில்லை.

பொருளாதார மந்த நிலை

பொருளாதார மந்த நிலை

வேலை வாய்ப்புக்குப் பின், எல்லாருக்கும் மிகப் பெரிய பிரச்சனை என்றால் அது ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி தான். அம்பானி தொடங்கி அம்பாசமுத்திரத்தில் பொட்டி கடை போட்டு வியாபாரம் செய்யும் தாத்தா வரை எல்லாரையும் இந்த பொருளாதாரா மந்த நிலை என்கிற சிக்கல் பாதித்துக் கொண்டு இருக்கிறது.

ஜிடிபி

ஜிடிபி

இந்தியப் பொருளாதார மந்த நிலையை பாதிக்கும் வகையில், இந்தியாவின் ஜிடிபி, கடந்த ஜூன் 2019-ல் 5 சதவிகிதம் மட்டும் வளர்ச்சி கண்டது. அதற்கு அடுத்த செப்டம்பர் 2019-ல் 4.5 % மட்டுமே வளர்ச்சி கண்டது. இந்த 2019 – 20 நிதி ஆண்டில், இந்தியாவின் ஜிடிபி சுமாராக 5.0 % வளரலாம் என ஆர்பிஐயே சொல்லி இருக்கிறது.

2019 - 20 நிதி ஆண்டில் 5%

2019 – 20 நிதி ஆண்டில் 5%

பல தரகு நிறுவனங்கள் மற்றும் அனலிஸ்டுகளும், இந்த 2019 – 20 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி, ஏறத்தாழ 5 சதவிகிதமாக இருக்கலாம் என தங்கள் கணிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள். எனவே பொருளாதார மந்த நிலையைச் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஆர்பிஐ வட்டி விகிதம்

ஆர்பிஐ வட்டி விகிதம்

இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த, மத்திய ரிசர்வ் வங்கி, தன் பங்குக்கு கடந்த 2019-ல் மட்டும் சுமாராக 1.35 % வட்டியைக் குறைத்தது. ஆனால் ஆர்பிஐ எதிர்பார்த்த அளவுக்கு பொருளாதாரம் சூடு பிடித்து முன்னேறவில்லை. தற்போது ஆர்பிஐயின் ரெப்போ ரேட் 5.15 சதவிகிதமாகவும், ஆர்பிஐயின் ரிவர்ஸ் ரெப்போ ரேட் 4.9 %-மாகவும் இருந்தும் பொருளாதாரம் பெரிய பயனடைய முடியாமல் இருக்கிறது.

கொள்கை ரீதியிலான மாற்றங்கள்

கொள்கை ரீதியிலான மாற்றங்கள்

சமீபத்தில் கூட, மத்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கையினால் ஓரளவுக்கு மேல், இந்தியப் பொருளாதாரத்துக்கு அதிகமாகச் செய்ய முடியாது. கொள்கை ரீதியான சீர் திருத்தங்கள் (Structural Reform) வேண்டும் என மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸே சொன்னதும் இங்கும் குறிப்பிட வேண்டி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது என்பதற்கு ஆர்பிஐ ஆளுநரின் பேச்சே ஒரு சாட்சியாக இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி வசூல்

ஜிஎஸ்டி வரி வசூல்

இது போக, மத்திய அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வரி வருவாய் வசூலும் பெரிய அளவுக்கு இல்லை. பல மாதங்களில், எதிர்பார்த்த அளவு கூட வரி வசூலாக வில்லை என செய்திகள் வெளியாயின. ஜிஎஸ்டி போல, நேரடி வரி வசூல் கூட டவுன் தான். இது போக, 1.4 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி குறைத்தும், இது வரை பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. மத்திய அரசின் நேரடி வரி வருவாய் அடி வாங்கியது தான் மிச்சம்.

பட்ஜெட்

பட்ஜெட்

ஆக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும், இந்த விலை வாசி, தொழில் துறை உற்பத்தி சரிவு, இந்தியப் பொருளாதார மந்த நிலை, வரி வருவாய் வசூல் குறைவு என பல சிக்கல்களை எதிர் கொண்டு இந்த பட்ஜெட்டைத் திட்ட மிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தையும் பிரட்டிப் போடும் விதத்தில், ஒரு அதிரடியான சூப்பர் பட்ஜெட் வருமா..? இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »