Press "Enter" to skip to content

தொடர்ந்து சரிவு தான் ரூபாய் மதிப்பு உயரும் அறிகுறி இல்லை: 71 ரூபாயில் நீடிக்கிறது

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 2 நாட்கள் உயர்ந்துள்ளது. கடந்த புதன்கிழமை காலையில்அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.71.21 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு காலையில் ரூ.71.18 என்ற அளவில் வலுவாக இருநத்து.  மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் 2020ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது என்று அன்னியச் செலாவணி பரிவர்த்தனையில் ஈடுபடும் வட்டாரங்கள் தெரிவித்தன. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பன்னாட்டு நிதியம் தனது உத்தேச பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 0.1 சதவீதம் அதிகரித்து 3.3 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் பங்குச்சந்தை வர்த்தகம் கணிசமாக ஏற்றம் பெற்றுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் நேற்று 300 புள்ளிகள் அதிகரித்து மொத்தம் 41,300 புள்ளிகளாக உயர்ந்தது. பங்குச்சந்தை காலை வர்த்தகத்தில் ஆட்டோ மற்றும் இரும்பு சம்மந்தமான தொழில் நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன.

அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் வரையில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுவதால் ரூபாய் மதிப்பு கணிசமாக உயரும் என்றே பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.70.80 முதல் 71.50 வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் அரசின் 10 ஆண்டுகள் நிதி பத்திரம் பரிவர்த்தனை 6.59 சதவீதம் வரையில் விலை ஏற்றம் பெற்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று உயர்ந்தது. சீனாவில் வைரஸ் தாக்குதல் காரணமாக சர்வதேச பொருளாதார நிலையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலையில் உயர்வு காணப்படும் என்று பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »