Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டம் 2020: ரியல் எஸ்டேட் துறையில் எதிர்பார்ப்புகள் என்னென்ன..!

நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ரியல் எஸ்டேட் துறை பலத்த அடி வாங்கியுள்ளது என்றே கூறலாம்.

ஏனெனில் அந்தளவுக்கு ரியல் எஸ்டேட் துறை பின் வாங்கியுள்ளது. முதலீடுகள் வெகுவாக குறைந்துள்ளன. காரணம் நாட்டில் நிலவி வரும் மந்த நிலை. மக்கள் கையில் பணப்புழக்கம் வீழ்ச்சி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மந்தம் என பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கடந்த ஆண்டில் எப்படி இருந்தாலும், நடப்பு ஆண்டில் ரியல் எஸ்டேட் துறை வணிகமானது எழுச்சி பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அரசின் இலக்கில் கூட இதுவும் ஒன்றாக உள்ளது என்றே கூட கூறலாம். அது அனைவருக்கும் வீடு என்ற திட்டம் தான்.

இது குறித்து சமீபத்தில் பிராண்டு ஈக்விட்டி பவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், இந்தியா ரியல் எஸ்டேட் துறையானது 2030 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலர் மதிப்பு அளவுக்கு வளர்ச்சி காணும் என்றும் அறிவித்துள்ளது.

imageஇக்கட்டான சூழலில் பட்ஜெட் 2020.. 14 காலாண்டு ஜிடிபி ஒரு பார்வை..!

இந்த நிலையில் 2020ம் ஆண்டானது இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு பெரும் ஏற்றம் தரும் ஆண்டாக இருக்கும் என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இது 2025ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% பங்களிப்பு செய்யும் என்றும் IBEF அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இப்படி ஒரு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் எந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

நாட்டில் விவசாயம் அல்லாத துறையில் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் துறையில் ரியல் எஸ்டேட் துறையும் அடங்கும். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்து வரும் நிலையில், தொய்ந்து போயுள்ள இந்த துறையில் எந்த மாதிரியான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. வாருங்கள் பார்க்கலாம்.

முதல் முறை ஒருவர் வீட்டை பெறுவதற்காக கடன் வாங்குகிறார் எனில் அதற்கான வட்டி விகிதத்தினை குறைக்க ஒரு நபர் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் இந்த திட்டமானது ஏப்ரல் 1 2016 மற்றும் மார்ச் 2017க்கு இடையில் வாங்கிய கடன்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஆக இது போன்ற நடைமுறையை தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

கடன்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட வேண்டும். மேலும் ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்பட வேண்டும். முத்திரை தாள் கட்டணத்தை குறைப்பது, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ஊக்குவிப்பு இதன் மூலம் ரியல் எஸ்டேட் துறை ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆக மொத்தத்தில் ரியல் எஸ்டேட் துறையின் மறுமலர்ச்சிக்கான திட்டத்தினை அரசாங்கம் மத்திய பட்ஜெட்டில் வெளியிடலாம் என்று நம்புவதாகவும் இத்துறையினர் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »