Press "Enter" to skip to content

மியூச்சுவல் பண்டு விழிப்புணர்வில் டெண்டுல்கர், தோனி பங்கேற்பு

புதுடில்லி: இந்திய மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோருடன், மியூச்சுவல் பண்டு பிரசாரத்துக்காக கைகோர்த்துள்ளது.

மியூச்சுவல் பண்டு முதலீடு குறித்த விழிப்புணர்வை முதலீட்டாளர்களிடையே ஏற்படுத்துவதற்காக, ஆம்பி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.விழிப்புணர்வு பிரசாரத்துக்காக, இத்தகைய பிரபலங்களை ஆம்பி பயன்படுத்துவது, இதுவே முதல் முறையாகும்.இது குறித்து, சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:விளையாட்டாக இருந்தாலும்; முதலீடாக இருந்தாலும், ஒழுக்கம் மற்றும் நீண்ட கால அணுகுமுறையே வெற்றியை அடைவதற்கான அடிப்படையாகும். மியூச்சுவல் பண்டு முதலீடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில், ஆம்பியுடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி.இவ்வாறு அவர் கூறினார்.

தோனி கூறியதாவது:இலக்கை அடிப்படையாக கொண்ட அணுகுமுறை, சீக்கிரமே துவங்குவது, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது, நிலையற்ற தன்மை குறித்து கலங்காதிருப்பது என்ற நான்கு மந்திரங்களை பின்பற்றி வருகிறேன்.இது விளையாட்டுக்கும், நிதி நிர்வாகத்துக்கும் பொருந்தும்.இவ்வாறு தோனி கூறினார்.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »