Press "Enter" to skip to content

விப்ரோவிலிருந்து விலகும் அபிதாலி நீமுச்வாலா.. காரணம் என்ன..!

தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தில் இருந்து, அதன் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான அபிதாலி நீமூச்வாலா விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

52 வயதான நீமுச்வாலா, தான் சில குடும்ப கடமைகள் காரணாமாக வெளியேறுவதாக தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் விப்ரோவிற்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படும் வரை பதவியில் நீடிப்பார் என்றும் ஒழுங்கு முறை தாக்கல் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

imageபிளாஸ்டிக் சாலை.. முகேஷ் அம்பானியின் டக்கரான ஐடியா..!!

நீமுச்வாலா கடந்த ஏப்ரல் 2015ல் விப்ரோவில் தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரியாக செயல்பட்டார். இதற்கு முன்பு டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து, அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி முழுநேர இயக்குநராக பொறுப்பேற்றார். அதே நேரம் அபுதாலி நீமுச்வாலா இந்த நிறுவனத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியாகவும் அந்த சமயத்தில் பொறுப்பேற்றார்.

நீமுச்வாலா விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது சுமார் 13% ஏற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய நான்காவது தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ, நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் நிகரலாபம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 35.1% அதிகரித்து 2,552.60 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

பெங்களுரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனத்தில் வளர்ச்சி என்பது தற்போது ஒரு கவலையாக உள்ளது. மேலும் விப்ரோ அதன் மேற்கத்திய வாடிக்கையாளர்களிடமிருந்து செலவு நெருக்கடியால் பாதிகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் அவர்கள் குறைந்த மலிவான விலைகளில் சேவைகளை பெற விரும்புவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நீமுச்வாலா தனது பதவி விலகல் பற்றி கூறுகையில், 75 ஆண்டுகால மரபு கொண்ட விப்ரோ என்ற ஒரு பெரும் நிறுவனத்திற்கு சேவை செய்வது எனது மரியாதை, அது எனக்கு ஒரு பாக்கியம் என்றும் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் மற்ற விவரங்களை கூற மறுத்து விட்டதாகவும் ராய்ட்டர்ஸ் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதே ரிஸாத் பிரேம்ஜி இது குறித்து கூறுகையில் அவரின் பங்களிப்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »