Press "Enter" to skip to content

பொருளாதார மேலாய்வு 2020: வங்கித் துறையில் கவனம் செலுத்துங்கள்.. CEA எச்சரிக்கை..!

நாட்டில் மிக கவலைகொள்ளும் விதமாக இந்திய பொருளாதாரம் உள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு இதை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து நிதிப் பற்றாக்குறை என்பது ஒரு பெரும் பிராச்சனையாகவே உள்ளது.

சொல்லப்போனால் வங்கிகள் கூட கடன் கொடுக்க முடியாத நிலை நிலவி வருகிறது. ஏனெனில் கடந்த ஆண்டில் நாட்டில் நிலவி வந்த மந்த நிலை காரணமாக பல துறைகள் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதனால் பல துறையினர், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தன. இதனால் பல வங்கிகளுக்கு வாராக்கடன் விகிதமானது உயர்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

சில வங்கிகள் இதற்காக பணத்தை விரைவில் மீட்டெடுக்க திவால் சட்டத்தினை எளிதாக்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலமாக வாராக்கடனாக இருக்கும் பணத்தினை வசூல் செய்ய இது வழி வகை செய்யும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த நிலையில் பொருளாதார சர்வே 2020ல், வங்கித் துறைகளை உடனடியாக மீட்க, அரசு உடனடியாக இந்திய வங்கித் துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்.

imageபட்ஜெட் 2020: பட்ஜெட்டில் கவனிக்கபட வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன..!

இது தவிர பொதுத்துறை வங்கிகளுக்கான Fin tech Hub ஒன்றை உருவாக்க இந்த பொருளாதார சர்வே 2020 முன்மொழிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், வாராக்கடன் ஒரு புறம் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கடன் கொடுக்கும் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் விகிதமும் குறைந்துள்ளது. ஆக பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்கப்படுமா? ஏனெனில் இதன் மூலம் மக்களின் பணப்புழக்கத்தினை அதிகரிக்க முடியும். இதனால் நாட்டில் நுகர்வை அதிகரிக்க முடியும், இதனால் நாட்டில் தேவையும் கூடும். இதனால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்றும் பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஆக இது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிசப்தமான உண்மையும் கூட.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »