Press "Enter" to skip to content

சைவத்துக்கு 10,887 ரூபாயும், அசைவத்துக்கு 11,787 ரூபாயும் மிச்சமாகிறதாம்! இந்தியப் பொருளாதார மேலாய்வு!

இந்த முறை, நம் நாட்டின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் தலைமையில் எழுதப்பட்ட இந்திய பொருளாதார சர்வேயில், தாலி மீல்ஸ் பற்றிய ஒரு சுவையான அத்தியாயத்தைச் சேர்த்து இருக்கிறார்கள்.

“Through Thalinomics – The Economics of a Plate of Food in India” என்பது தான் இந்திய பொருளாதார சர்வேயில் இடம் பிடித்து இருக்கும் அத்தியாயம். வாருங்கள் அந்த தாலி மீல்ஸ் அத்தியாயத்துக்குச் செல்வோம்.

சிபிஐ Vs தொழிலாளர்கள்

இந்த அத்தியாயத்தில், நுகர்வோர் விலைக் குறியீடு (சிபிஐ பணவீக்கம்) மற்றும் தொழிற்சாலைப் பணியாளர்களோடு ஒப்பிட்டு இருக்கிறார்கள். இந்தியா முழுக்க 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் டெரிட்டரி பிரதேசங்களில் 80 மையங்களில், கடந்த ஏப்ரல் 2006 முதல் அக்டோபர் 2019 வரையான விவரங்களைக் கணக்கிட்டு இருக்கிறார்களாம்.

imageIndian Economic survey: 1.24 லட்சம் நிறுவனங்கள்.. இந்தியா 3-வது இடம்..!

தாலி வாங்க முடிகிறதா

ஒரு தாலி (சைவம் & அசைவம்) மீல்ஸை, எல்லோராலும் வாங்கி சாப்பிட முடிகிறதா..? என்று ஆராய்ந்து, அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். பொருளாதாரம் என்கிற ஒரு விஷயம், அனைத்து தரப்பு மனிதர்களின், அன்றாட வாழ்கையிலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு தான் இருக்கிறது.

பாமர மக்கள்

ஆனால் அதை ஏழை பாமர மக்கள் அதிகம் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை. இந்தியா முழுக்க சைவ தாலியின் விலை கடந்த 2015 – 16 முதல் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு இருக்கிறது. ஆனால் 2019-ம் ஆண்டு மீண்டும் விலை ஏற்றம் கண்டு இருக்கிறதாம்.

சைவத்துக்கு 10,887 ரூபாய்

முடிவாக என்ன தான் சொல்கிறார்கள் என்றால்.. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள். அந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் நாள் ஒன்றுக்கு 2 வெஜ் தாலி (சைவ சாப்பாடு) சாப்பிடுகிறார்கள் என்றால் ஆண்டுக்கு 10,887 ரூபாய் மிச்சப்படுத்த முடியுமாம். சுருக்கமாக நாள் ஒன்றுக்கு ஒருவர் 5.96 ரூபாய் மிச்சப்படுத்த முடியுமாம்.

அசைவத்துக்கு 11,787 ரூபாய்

அதே போல ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருக்கிறார்கள். அந்த ஐந்து பேர் கொண்ட குடும்பம் நாள் ஒன்றுக்கு 2 அசைவ தாலி (அசைவ சாப்பாடு) சாப்பிடுகிறார்கள் என்றால் ஆண்டுக்கு 11,787 ரூபாய் மிச்சப்படுத்த முடியுமாம். சுருக்கமாக நாள் ஒன்றுக்கு ஒருவர் 6.45 ரூபாய் மிச்சப்படுத்த முடியுமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »