Press "Enter" to skip to content

2 மெகா விவசாயத் திட்டங்கள்: வரவு செலவுத் திட்டம் 2020

இந்திய மக்கள் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் அளவிற்கு இந்தப் பட்ஜெட் அறிக்கை முக்கியதுவம் பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளது இதை எப்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மோடி தலைமையிலான அரசு சரி செய்யப்போகிறது என்பதைக் காண நாட்டு மக்கள் மிகவும ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் விவசாயத் துறை சார்ந்து 2 மிகப்பெரிய திட்டங்கள் வர உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

2 மெகா திட்டங்கள்

பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்க உள்ள 2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் விவசாயிகளின் நலனுக்காகவும், விவசாயப் பொருட்களின் உற்பத்திக்கும் இரண்டு சூப்பரான திட்டம் வர உள்ளதாகத் தெரிகிறது. ஒன்று விவசாயிகளுக்கான மாற்றுப் பயிர் திட்டம் (crop diversification) மற்றொன்று விவசாயி உற்பத்தி அமைப்பு திட்டம்,.

விவசாயி உற்பத்தி அமைப்பு

விவசாயி உற்பத்தி அமைப்பு

இந்த விவசாயி உற்பத்தி அமைப்பு என்பது சிறு மற்றும் குறு நில விவசாயிகள் இணைந்து தங்களது தயாரிப்புகளை ஒன்றாகச் சேர்த்துச் சந்தையில் விற்பனை செய்வது தான் இலக்கு. விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை ஒன்றாக இணைப்பதன் மூலம் சந்தையில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படும் இதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

10,000 அமைப்புகள்

10,000 அமைப்புகள்

கடந்த அக்டோபர் மாதம் 11ஆம் தேதி இந்த FPO (Farmer Producer Organisations) திட்டத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுமார் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இதுபோல் இந்தியாவில் சுமார் 10000 அமைப்புகளை உருவாக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுமட்டும் அல்லாமல் மத்திய வேளாண்மைத் துறையும் இத்தகைய அமைப்புகளுக்கு நிதியுதவி, பயிற்சி, கடன் தேவைகள் ஆகியவற்றைக் கொடுக்கவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒவ்வொரு அமைப்பு ஒரு நிறுவனமாக இயங்கும் அளவிற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மாற்றுப் பயிர் திட்டம்

மாற்றுப் பயிர் திட்டம்

பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திர பிரதேச மாநிலங்களில் அதிக நீர் வளம் தேவைப்படும் பயிர்கள் தொடர்ந்து பயிரிடப்படுகிறது. இதனால் பல பிரச்சனைகளை ஏற்பட்டு வருகிறது.

இதனைக் கருத்தில் மண் வளத்தை மேம்படுத்த 500 முதல் 600 கோடி ரூபாய் செலவில் மாற்றுப்பயிர் திட்டத்தை மத்திய அறிவிக்க உள்ளதாகத் தெரிகிறது. இவை அனைத்து பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையில் தெரியவரும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »