Press "Enter" to skip to content

நிதி அமைச்சர் தகவல் உண்மையா..? பொருளாதாரத்தின் அடிப்படை ஸ்டிராங்கா இருக்கா..?

What is The Indian Economic survey ?|Indian Economic survey என்றால் என்ன..? யார் தயாரிக்கிறார்கள்|

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன் 2020 – 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யத் தொடங்கி இருக்கிறார்.

தன் பட்ஜெட் உரையின் தொடக்கத்திலேயே, இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் வலுவாக இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

உண்மையாகவே இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டகள் வலுவாகத் தான் இருக்கிறதா..? வாருங்கள் பார்ப்போம்.

எதை எல்லாம் பார்க்கலாம்

எதை எல்லாம் பார்க்கலாம்

இந்தியப் பொருளாதாரம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை ஆறு விஷயங்களைக் கொண்டு பார்க்கலாம்.

1. ஜிடிபி

2. அந்நிய நேரடி முதலீடுகள் FDI

3.அந்நிய நிறுவன முதலீடுகள் FII

4. ஆட்டோமொபைல் விற்பனை

5. வரி வசூல் விவரங்கள்

6. Disinvestment கணக்கு

1. ஜிடிபி

1. ஜிடிபி

கடந்த 2016 – 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2016) 9.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் வெறும் 4.5 சதவிகிதமாக சரிவைக் கண்டு இருக்கிறது. கணக்கு போட்டுப் பார்த்தால், பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை.

தொடர் சரிவு

தொடர் சரிவு

கடந்த 2018 – 19 நிதி ஆண்டில் ஜூன் 2018 காலாண்டில் 8 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது இந்தியாவின் ஜிடிபி. அதில் இருந்து தொடர்ந்து இந்தியாவின் ஜிடிபி சரிந்து கொண்டு தான் இருக்கிறது என்றால் இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் நன்றாக இருக்கிறது என பொருள் கொள்ள முடியுமா..?

2. அந்நிய நேரடி முதலீடு FDI

2. அந்நிய நேரடி முதலீடு FDI

2014 – 15 நிதி ஆண்டு தொடங்கி 2019 – 20 (ஏப்ரல் – செப்டம்பர்) நிதி ஆண்டு வரை கணக்கில் எடுத்துக் கொண்டால், கடந்த 2018 – 19 நிதி ஆண்டில் தான் அதிகபட்சமாக, 62 பில்லியன் டாலர் முதலீடுகள் வந்து இருக்கிறது. ஆனால் இந்த 2019 – 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் வெறும் 34 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடுகள் வந்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

வளர்ச்சி இல்லை

வளர்ச்சி இல்லை

பெரிய அளவில் முதலீடுகளின் வளர்ச்சி அதிகரிக்கவில்லை. கிட்டத் தட்ட அந்நிய நேரடி முதலீடுகள் தேக்கம் காணத் தொடங்கி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நாட்டில் முதலீடுகள் வரவில்லை என்றால் வளர்ச்சி சிரமம் தானே. ஒட்டு மொத்த உலக பொருளாதாரமும் ஆட்டம் காணும் போது, இந்திய பொருளாதாரத்தின் ஃபண்டமெண்டல்கள் மட்டும் வலுவாக இருக்க முடியுமா என்ன..?

3. அந்நிய நிறுவன முதலீடு FII

3. அந்நிய நிறுவன முதலீடு FII

2014 – 15 நிதி ஆண்டு தொடங்கி 2019 – 20 (ஏப்ரல் – ஜனவரி 22, 2020) வரையான காலத்தில் எப்போது அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்து இருக்கிறார்கள் என்றால் அது 2014 – 15 நிதி ஆண்டில் தான் 2.77 லட்சம் கோடி ரூபாய் செய்து இருக்கிறார்கள்.

வெளியேறிய முதலீடுகள்

வெளியேறிய முதலீடுகள்

கடந்த 2018 – 19 நிதி ஆண்டில் இந்தியாவில் முதலீடே வரவில்லை. மாறாக 38,930 கோடி ரூபாயை இந்தியாவில் இருந்து வெளியே எடுத்து இருக்கிறார்கள். இந்த 2019 – 20 நிதி ஆண்டிலும் 79,642 கோடி ரூபாய் மட்டும் தான் வந்து இருக்கிறதாம். இப்படி முதலீடுகள் சரிந்து கொண்டு இருக்கும் போது இந்தியாவின் ஃபண்டமெண்டல்கள் வலுவாக இருப்பதாகச் சொல்ல முடியுமா..?

4. ஆட்டோமொபைல்

4. ஆட்டோமொபைல்

இந்தியாவில் ஆட்டோமொபைல் விற்பனை சரிவைப் பற்றி அதிகம் சொல்லத் தேவை இல்லை. கடந்த 2016 – 17 நிதி ஆண்டில் 2.18 கோடி வாகனங்கள் விற்பனை ஆயின.

2017 – 18-ல் 2.49 கோடி

2018 – 19-ல் 2.62 கோடி

2019 – 20-ல் (ஏப் – டிச) 2.07 கோடி வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இது தான் இந்தியாவின் வலுவான பொருளாதார ஃபண்டமெண்டல்களா..?

5. வரி வசூல்

5. வரி வசூல்

கடந்த 2019 – 20 நிதி ஆண்டில் பியுஷ் கோயல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.8 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.6 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னாகள். அடுத்த நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் நேரடி வரி வருவாய் 13.35 லட்சம் கோடி ரூபாயும், மறைமுக வரி வருவாய் 11.19 லட்சம் கோடி வசூலிப்போம் என்று சொன்னார்கள்.

எதார்த்தம்

எதார்த்தம்

ஆனால் உண்மையில் 2019 – 20 நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் 11.5 லட்சம் கோடியும், மறைமுக வரி 9.5 லட்சம் கோடி வரலாம் என்கிறார்கள். ஆக ஒரு நாட்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி என இரண்டுமே நிணயித்த அளவை அடையவில்லை. கடந்த 2018 – 19 நிதி ஆண்டை விட குறைவான அளவே வரி வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது என்றால் உண்மையில் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறதா..?

6. Disinvestment சொதப்பல்

6. Disinvestment சொதப்பல்

பொதுவாக அரசு, தன்னிடம் இருக்கும் சொத்துக்களை விற்று பணத்தை திரட்டும் வழக்கம் உண்டு. இதை ஆங்கிலத்தில் Disinvestment என்பார்கள். இந்த Disinvestment வழியாக கடந்த 2017 – 18 நிதி ஆண்டில் 1 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து 1 லட்சம் கோடி வசூலித்தார்கள். 2018 – 19 நிதி ஆண்டில் 84,972 கோடி இலக்கு நிர்ணயித்து, 80,000 கோடி வசூலித்தார்கள்.

அரசாலேயே முடியல

அரசாலேயே முடியல

ஆனால் இந்த 2019 – 20 நிதி ஆண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க திட்டமிட்டார்கள். ஆனால் இதுவரை 18,095 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஆக அரசு நிறுவனங்களையே நம்பி வாங்க ஆள் இல்லை. அந்த அளவுக்கு பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது. இதைத் தான் நம் நிதி அமைச்சர் இந்தியப் பொருளாதாரத்தின் ஃபண்டமெண்ட்கள் வலுவாக இருக்கிறது என்கிறாரா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »