Press "Enter" to skip to content

சீனாவிலுள்ள கிளைகளை மூடுவதாக ஆப்பிள் அறிவிப்பு

சீனாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் கிளைகளை பிப்ரவரி 9ஆம் தேதி மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து பரவியுள்ள புதிய வகை கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை பலியானவா்கள் எண்ணிக்கை 259-ஆக அதிகரித்துள்ளது. 11,791 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 

இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக சீனாவில் செயல்பட்டு வரும் அதன் கிளைகளை பிப்ரவரி 9ஆம் தேதி மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள தங்களது பணியாளர்களையும் சீனா செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. 

பாதிப்பு குறைந்த பின்னர் கிளைகள் முழுவதையும் சுத்தம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும் ஆன்லைன் வர்த்தகம் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.

Source: dinamani

More from வணிகம்More posts in வணிகம் »