Press "Enter" to skip to content

வரவு செலவுத் திட்டம் 2020: தனியார்மயமாகிறது எல்ஐசி.. பங்குகளை விற்கப் போவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: நாட்டில் நிலவி மந்த நிலைக்கு மத்தியில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஐந்து மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த லிஸ்டில் தற்போது எல்ஐசியும் சேர்ந்துள்ளது. எல்ஐசியில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசிடம் இருக்கும் ஐடிபியை வங்கியின் பங்குளை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

வங்கியில் FD வைத்திருப்பவர்களுக்கு.. இனி ஐந்து லட்சம் கேரண்டி..!

எல்ஐசி பங்கு விற்பனை

எல்ஐசி பங்கு விற்பனை

இது தவிர மிகப்பெரிய பொதுத்துறையை சேர்ந்த காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி-யினை பங்கு சந்தையில் பட்டியிலிட திட்டமிட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள தனது பங்குகளில் ஒரு பகுதியை விற்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் ராமதாஸ்

எதிர்ப்பு தெரிவிக்கும் ராமதாஸ்

எல்.ஐ.சி. பங்குகளை IPO மூலம் பங்கு சந்தைகள் வழியாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு சமமானது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தினை மேம்படுத்த தனியார்மயம்

பொருளாதாரத்தினை மேம்படுத்த தனியார்மயம்

சமீப காலமாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலையை போக்கவும், பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுத்துறை நிறுவனங்களை அரசு நிறுவனங்களை தனியார்மாக்கும் திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

தனியார்மயத்திற்கு அனுமதி

தனியார்மயத்திற்கு அனுமதி

கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அமைச்சரவை பிபிசிஎல் உள்பட ஐந்து மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயத்திற்கு ஒப்புதல் அளித்தது. இதில் பிபிசிஎல் தவிர, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, டிஹெஸ்டிசி இந்தியா அன்ட் நீப்கோ எனப்படும் நார்த் ஈஸ்டர்ன் எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றிற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த லிஸ்டில் எல்ஐசியும் சேரப்போகிறதா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

முதலீட்டு இலக்கு

முதலீட்டு இலக்கு

இவ்வாறு அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் 2021ம் நிதியாண்டில் 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் நிதி திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பெருத்த கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் ஏர் இந்தியாவின் முழு பங்கினையினையும் விற்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் நல்ல முறையில் லாபத்துடன் இயங்கி வரும் எல் ஐ சியின் பங்குகளை விற்க அரசு திட்டமிட்டுள்ளது சற்று கவலையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.

நடப்பு ஆண்டில் பங்கு விற்பனை இலக்கு

நடப்பு ஆண்டில் பங்கு விற்பனை இலக்கு

இவ்வாறு அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதன் மூலம் 2020ம் நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை இந்த நிதியாண்டில் 18,094.59 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிக செயல்திறன்

அதிக செயல்திறன்

எல்ஐசி பொதுப்பங்கு வெளியீடானது அதிக செயல்திறன் மற்றும் நல்லாட்சி நடைமுறையை கொண்டு வரும் என்றும் சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பல பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரும் எதிர்கட்சிகளும் நிபுணர்களும், நல்ல முறையில் இயங்கி வரும் எல்ஐசி பங்கு விற்பனையை மட்டும் ஏற்றுக் கொள்வார்களா என்ன? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »