Press "Enter" to skip to content

2020-21 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிரொலி..: பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சியுடன் நிறைவு

மும்பை: 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 987 புள்ளிகள் என பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து  39,735 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 392 புள்ளிகள் சரிந்து 11,643 புள்ளிகளில் வர்த்தகமானது.  2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பங்குச்சந்தை பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1-ம் தேதிக்கு பாஜ தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டில் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டை முன்னிட்டு பங்குச்சந்தை காலை முதல் ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 140 புள்ளிகள் குறைந்து 40,576 புள்ளிகளாக வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை நிஃபடி 126 புள்ளிகள் சரிந்து 11,910 புள்ளிகளாக வர்த்தகமாகியது. வர்த்த தொடக்கத்தில் சரிவை சந்தித்த பங்குசந்தைகள் மீண்டும் உயர்ந்து வர்த்தகமாகிறது. அதன் பின்னர் மலை இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1059 புள்ளிகள் சரிந்து 39663 புள்ளிகளானது.

2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 987 புள்ளிகள் என பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்து  39,735 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃபடி 392 புள்ளிகள் சரிந்து 11,643 புள்ளிகளில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

Source: dinakaran

More from வணிகம்More posts in வணிகம் »