Press "Enter" to skip to content

ஜனவரியில், ‘மாருதி’ விற்பனை 1.6 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி இந்தியா’வின், கடந்த ஜனவரி மாத விற்பனை, 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது.மாருதி சுசூகி நிறுவனம், கடந்த ஜனவரியில், மொத்தம், 1.54 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.இதுவே, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை, 1.52 லட்சம் வாகனங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரை, கடந்த ஜனவரியில், 1.7 சதவீதம் அதிகரித்து, 1.44 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜனவரியில், 1.42 லட்சம் வாகனங்களாக இருந்தன.சிறிய கார் பிரிவைச் சேர்ந்த, ‘ஆல்ட்டோ, வேகன் ஆர்’ ஆகியவற்றை பொறுத்த வரை, கடந்த ஆண்டு ஜனவரியில், 23 ஆயிரத்து, 360 கார்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 25 ஆயிரத்து, 885 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

‘காம்பாக்ட்’ பிரிவிலுள்ள, ‘சுவிப்ட், செலிரியோ, இக்னிஷ், பலேனோ, டிசையர்’ ஆகியவற்றின் விற்பனை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 11.6 சதவீதம் அதிகரித்துள்ளது.மத்திய தர, ‘செடான்’ காரான, ‘சியாஸ்’ கார் விற்பனை, கடந்த ஆண்டு ஜனவரியில், 2,934 ஆக இருந்த நிலையில், மதிப்பீட்டு மாதத்தில், 835 ஆக சரிந்துள்ளது.பன்முக பயன்பாடு வாகனங்களான, ‘விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்.கிராஸ், எர்ட்டிகா’ ஆகியவற்றின் விற்பனை, 26.6 சதவீதம் சரிவை கண்டுள்ளது.

ஏற்றுமதியை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜனவரியில், 9,571 கார்கள் ஏற்றுமதி ஆகியிருந்த நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில், 9,624 கார்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன.

Source: dinamalar

More from வணிகம்More posts in வணிகம் »