Press "Enter" to skip to content

எச்சரிக்கும் மூடிஸ்.. வரவு செலவுத் திட்டத்தில் நிறுவனங்களுக்கு எதுவும் இல்லை.. இலக்கினை அடைவது கஷ்டம்..!

டெல்லி: மத்திய அரசு தனது இரண்டாவது பட்ஜெட்டை கடந்த சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது. அதில் நாமினல் ஜிடிபி அடுத்த நிதியாண்டில் 10% ஆக இருக்கும் என்றும் மத்திய அரசு மதிப்பிட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியிருந்தார்.

இதே நடப்பு நிதியாண்டில் இந்த நாமினல் ஜிடிபி 12% ஆக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிதி பற்றாக்குறை மார்ச் 31, 2021வுடன் முடிவடையும் நிதியாண்டில் 3.5% ஆக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூடிஸ் நிறுவனம் இந்த இலக்கினை அடைவது சவாலான விஷயம் தான் என்று தெரிவித்துள்ளது. ஏன் அப்படி தெரிவித்துள்ளது வாருங்கள் பார்க்கலாம்.

சவாலாக இருக்கும்

இந்தியாவில் 2020 – 21ம் ஆண்டிற்கான நிதிப்பற்றாக்குறை மற்றும் பெயரளவிலான ஜிடிபி இலக்கு அடைவது சவாலானதாக இருக்கும் என்றும் சர்வதேச கடன் மதிப்பீட்டாளரான மூடிஸ் தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த பட்ஜெட் சில நிதி சவால்களையும் முன்வைக்கும், எதிர்பார்த்தை போல நிறுவனங்களுக்கு பெரியதொரு மாற்றம் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் மூடிஸ் கூறியுள்ளது.

வளர்ச்சிக்காக முதலீடு

வளர்ச்சிக்காக முதலீடு

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அரசாங்கம் சனிக்கிழமையன்று பண்ணைத் துறையில் கிட்டதட்ட 40 பில்லியன் டாலர்களையும், ஒரு தசாப்தத்தில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், விவசாயத்துறையிலும், நீர் பற்றாக்குறை உள்ள 100க்கும் மேற்பட்ட இடங்களை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதாகவும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஆனால் தொழில் துறைக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அப்படி எந்தவொரு திட்டமும் இல்லை.

ஜிடிபி வீழ்ச்சி

ஜிடிபி வீழ்ச்சி

ஜூலை – செப்டம்பர் காலாண்டிலேயே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இது தேவை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இது வணிகங்களைத் பின்னடைவை சந்திக்க தூண்டியது. மேலும் இது நிறுவனங்களில் முதலீடுகளையும் குறைத்தது. இதனால் நிறுவனங்கள் வேலைகளை குறைக்க நிர்பந்தப்படுத்தியது.

அதிக நிதி பற்றாக்குறை

அதிக நிதி பற்றாக்குறை

இதே ஏப்ரல் முதல் தொடங்க இருக்கும் நிதியாண்டில் உண்மையான பொருளாதார வளர்ச்சி 6 – 6.5% வரை உயரும் என்றும் அரசாங்கம் கணித்துள்ளது. ஆனால் அதே சமயம் இந்த சமயத்தில் இது அதிக நிதி பற்றாக் குறையையும் கொண்டிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் மெதுவான போக்குகளை நாங்கள் காண்கிறோம்.

தரக்குறியீடு சரிவு

தரக்குறியீடு சரிவு

ஆக 2020ல் நாம் கண்ட வளர்ச்சியை விட 2021ல் அதிகரிக்கும் என்று நாங்கள் கணித்து வருகிறோம். ஆனால் போகிற போக்கு அவ்வாறு இல்லை. சொல்லப்போனால், தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2020, நிறுவனங்களின் எந்தவொரு நிலைப்பாட்டையும் மாற்றவில்லை. இதனால் மூடிஸ் தரக்குறியீட்டு நிறுவனம் Baa2 என்ற எதிர்மறையான குறியீட்டை வழங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »