Press "Enter" to skip to content

இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹெச்யுஎல்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..!

டெல்லி: ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களை தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தில் பிரிட்டீஸ் டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் 2018ன் படி, 18,000 பேர் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றது.

ஏற்றுமதியாளர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு.. எப்படி தெரியுமா..!

லாபம் அதிகரிப்பு

லாபம் அதிகரிப்பு

நாட்டின் மிகப்பெரிய நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தில், கடந்த டிசம்பர், 2019வுடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த நிகரலாபம் 11.9% அதிகரித்து, 1,616 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 1,444 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டினை விட இந்த ஆண்டு அதிகளவு லாபம் கண்டுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு

விற்பனை அதிகரிப்பு

குறிப்பாக சொல்லவேண்டுமானால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 5% ஏற்றம் கண்டு 2,178 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இது 52 வார உச்சத்தினை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனம் கடந்த அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் விற்பனை முந்தைய ஆண்டினை விட 3.62% அதிகரித்து, 9.696 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 9,357 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ebitda லாபம்

Ebitda லாபம்

சந்தை வல்லுனர்களின் கூற்றுப்படி, டிசம்பர் காலாண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி, எஃப்.சி.எம்.ஜி பொருட்களின் வளர்ச்சியை விட 3% அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே வரி வட்டி தேய்மானம் உள்ளிட்டவைக்கு முந்தைய லாபம் 19% அதிகரித்து 2.445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நீடித்து வரும் மந்தநிலை

நீடித்து வரும் மந்தநிலை

குறுகிய காலத்தில் இத்துறை மீண்டு நல்ல லாபம் கண்டிருந்தாலும், நீண்ட கால நோக்கில் இன்னும் மந்த நிலையே நிலவி வருவதாகவும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் மேக்தா கிராமப்புறங்களில் நீடித்து வரும் மந்த நிலையினால் செலவினங்காள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »