Press "Enter" to skip to content

தொழில் துறை புத்துயிர் பெற்றுவிட்டது.. ஆதாரம் இதோ..!

டெல்லி : இந்தியாவில் உற்பத்தி துறை சார்ந்த பிஎம்ஐ குறியீடு ((Purchasing Managers’ Index) எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடந்த ஜனவரி மாதத்தில் 55.3 ஆக அதிகரித்துள்ளது.

நிக்கி மார்கிட் இந்தியா அமைப்பு வெளியிட்ட உற்பத்தி குறித்தான கொள்முதல் குறியீடு (பிஎம்ஐ) குறியீடு, கடந்த ஜனவரி மாதத்தில் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தொழில்துறை மிக நலிவடைந்திருந்த நிலையில் கடந்த பல மாதங்களாகவே இந்த குறியீடானது படு வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த குறீயீடு டிசம்பர் மாதத்தில் 52.7% ஆக இருந்தது குறிப்பிடத்தகக்து.

imageரத்தக் களரியில் சீனா.. தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள்..!

தரவு பகுப்பாய்வு நிறுவனமான IHS Markit கணக்கெடுப்பின் படி, புதிய ஆர்டர்கள், வெளியீடு, வேலைகள், சப்ளையர்கள், டெலிவரி செய்த நேரம் மற்றும் சுமார் 400 உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கப்பட்ட பங்குகள் ஆகியவற்றை கண்கானித்து இந்த தரவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த பிஎம்ஐ குறியீடானது, தேவை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது வளர்ச்சிக்கு வித்திட்டதையும் காட்டுகிறது. அதோடு உள்ளீட்டு கொள்முதல், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகள் என நிறுவனங்கள் தங்களது திறனை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றன. மேலும் புதிய வணிகத்தில் மேலும் மேலும் அதிகரிப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அவற்றின் திறன்களை மேம்படுத்துகின்றன என்றும் மார்கிட்டின் முதன்மை பொருளாதார நிபுணர் பொலியானா டி லிமா கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் பொருட்கள் மற்றும் சேவை வரி, முக்கிய துறைகளின் வளர்ச்சி, தொழில்துறை உற்பத்தி வெளியீடுகள், கடந்த ஜனவரி அதிகரித்திருக்கும் என்றும், இதனால் இது குறித்தான குறீயீடுகள் சாதகமாக பாதையில் இருக்கலாம் என்றும் சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

imageரத்தக் களரியில் சீனா.. தெறித்து ஓடிய முதலீட்டாளர்கள்..!

இந்த துறை மிக பிரகாசமான வளர்ச்சிக்கு நுகர்வோர் பொருட்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும், இதோடு இடை நிலை பொருட்களின் வளர்ச்சியும் அதிகரிகரித்தது என்றும் மார்கிட் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஆசிய, ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளார்களுக்கு அதிக விற்பனையை காட்டியுள்ளது இந்த அறிக்கை. இதோடு மிதமான தேவை, புதிய கிளையன்ட், வெற்றிகள், விளம்பரம் மற்றும் தயாரிப்பு பல்வகைப்படுத்தல் ஆகியவற்றை எதிர் வரும் ஆண்டில் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். இதனால் வணிக நம்பிக்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் டி லிமா கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

More from வணிகம்More posts in வணிகம் »