Press "Enter" to skip to content

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: இங்கிலாந்து சோதனை அணியில் விளையாடிய யாருக்கும் இடமில்லை

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளைமறுதினம் (ஆகஸ்டு 21-ந்தேதி) நடக்கிறது.

அதன்பின் 28-ந்தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யாருக்கும் இடம் கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட், ஜாஃப்ரா ஆர்சர், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜோஸ் பட்லர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. இயன் மோர்கன் (கேப்டன்), 2. மொயீன் அலி, 3. பேர்ஸ்டோவ், 4. டாம் பாண்டன், 5. சாம் பில்லிங்ஸ், 6. டாம் கர்ரன், 7. ஜோ டென்லி, 8. லீவிஸ் கிரேகோரி, 9. கிறிஸ் ஜோர்டான், 10. சாஹிப் மெஹ்மூத், 11. தாவித் மலன், 12. அடில் ரஷித், 13. ஜேசன் ராய், 14. டேவிட் வில்லே.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »