Press "Enter" to skip to content

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

U19 உலக கோப்பை 2-வது காலிறுதியில் கடைநிலை வீரர்கள் சிறப்பாக விளையாட வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பினோனியில் நேற்று நடந்த 2-வது கால் இறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 47.5 ஓவர்களில் 238 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 99 ரன்கள் (104 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். நியூசிலாந்து அணி தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 4 விக்கெட்டும், ஜோய் பீல்டு, ஜெஸ்சி தாஷ்கோப் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது.

தோல்வி கண்ட வெஸ்ட்இண்டீஸ் அணி அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. 9-வது விக்கெட்டுக்கு ஜோய் பீல்டு (38 ரன்கள்), கிறிஸ்டியன் கிளார்க் (46 ரன்கள்) ஜோடி ஆட்டம் இழக்காமல் 86 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. நியூசிலாந்து வீரர் கிறிஸ்டியன் கிளார்க் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »