Press "Enter" to skip to content

20 கிலோமீட்டர் நடைபந்தயம் – இந்திய வீராங்கனை பாவ்னா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயத்தில் இந்திய வீராங்கனை பாவ்னா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ராஞ்சி:

பெண்களுக்கான தேசிய 20 கிலோ மீட்டர் நடைபந்தயம் ராஞ்சியில் இன்று நடந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற ராஜஸ்தானை சேர்ந்த பாவ்னா ஜாட் பந்தய தூரத்தை 1 மணி 29.54 வினாடியில் கடந்தார். இது புதிய தேசிய சாதனையாகும்.

இதற்கு முன்பு அவர் கடந்த அக்டோபர் மாதம் 1 மணி 38.30 நிமிடத்தில் கடந்ததே சிறந்த நிலையாக இருந்தது.

இதன்மூலம் பாவ்னா ஜாட் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். பிரியங்கா கோஸ்சுவாமி மயிரிழையில் ஒலிம்பிக் வாய்ப்பை தவற விட்டார். அவர் பந்தய தூரத்தை 1 மணி 31.36 நிமிடத்தில் கடந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்கிறது. இதுவரை இந்தியா சார்பில் 64 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

தடகளத்தில் இருந்து 3-வது நபராக பாவ்னா ஜாட் தகுதி பெற்றார். ஏற்கனவே அவினாஷ் (3000 மீட்டர் ஸ்டிபிள் சேஷ்), இர்பான் (20 கிலோமீட்டர் நடை பந்தயம்) ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »