Press "Enter" to skip to content

உமிழ்நீரை பயன்படுத்தாவிடில் பந்தை ஷைனிங் செய்வது எப்படி?: புவனேஷ்வர் குமார்

கொரோனா பீதியால் பந்தை ஷைனிங் செய்வது எப்படி என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்கிறது.

இரண்டு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராகி வருகிறார்கள். கொரோனா வைரஸ் பீதியால் இரு அணி வீரர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டாக்டர்கள் ஆலோசனைப்படி கடைபிடிக்க இருக்கிறார்கள்.

போட்டியின்போது புதுப்பந்தை பளபளப்பாக வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவார்கள். உமிழ்நீரை தொட்டு பந்தை நன்றாக தேய்ப்பார்கள். இதனால் பந்து ஷைனிங் ஆகி ஸ்விங் ஆகும்.

இப்படி வீரர்கள் செய்தால் நோய் பரவ வாய்ப்புள்ளது. டாக்டர் ஆலோசனைக்கு பிறகு இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாங்கள் இந்த விஷயம் குறித்து சிந்தித்துள்ளோம். ஆனால், உமிழ்நீரை பயன்படுத்தமாட்டோம் என்பதை தற்போது என்னால் கூற இயலாது. ஏனென்றால், உமிழ்நீரை பயன்படுத்தாவிடில், பந்தை ஷைனிங் செய்வது எப்படி?.

அப்புறம் எங்களது பந்தை துவம்சம் செய்தால், நாங்கள் சரியாக பந்து வீசவில்லை என்று ரசிகர்கள் கூறுவார்கள். இன்று மாலை அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இதுகுறித்து முடிவு செய்யப்பட்டும். மேலும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »