Press "Enter" to skip to content

ஆர்சிபி போட்டிகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கிறது கர்நாடகா அரசு

கொரோனா வைரஸ் பீதியால் ஆர்சிபி போட்டிகளை குறித்து என்ன முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசிடம் ஆலோசனை கேட்டுள்ளது கர்நாடகா அரசு.

ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதியில் இருந்து மே மாதம் 24-ந்தேதி வரை நடக்கிறது. போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் ஊடுருவ ஆரம்பித்தது.

இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கும் போட்டிகள் தள்ளிப் போகலாம் என அம்மாநில மந்திரி ஒருவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆர்சிபி அணிகள் விளையாட இருக்கும் போட்டிகள் குறித்து மத்திய அரசிடம் ஆலோசனைக் கேட்டுள்ளது கர்நாடக அரசு.

இதுகுறித்து கர்நாடக மாநில மருத்துவக் கல்வி மந்திரி டாக்டர் கே. சுதாகர் கூறுகையில் ‘‘நான் மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், கர்நாடக மாநிலத்தில் போட்டிகள் நடைபெறும் வகையில் ஐபிஎல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் போட்டிகள் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிரா அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது. நாங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வழிகாட்டுதல் அறிவுரைக்காக காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளேன்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »