Press "Enter" to skip to content

2-வது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்காளதேசம்

டாக்காவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியிலும் ஜிம்பாப்வேயை வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது வங்காளதேசம்.

வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. தொடக்க வீரராக களம் இறங்கிய தொடக்க வீரர் டெய்லர் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்தார்.

பின்னர் 120 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய லிட்டோன் தாஸ், முகமது நைம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நைம் 34 பந்தில் 33 ரன்கள் சரெ்த்து ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் ஆட்டமிழக்காமல் 45 பந்துகளில் 60 ரன்கள் அடிக்க வங்காளதேசம் 15.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »