Press "Enter" to skip to content

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை?- உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைறெ இருக்கும் நிலையில், கொரோனா வைரசை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று ஐகோர்ட் கேள்வி எழுந்திதுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் அலெக்ஸ் பென்சிகர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி முதல் மே 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெளி நாடுகளை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். சுமார் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான ரசிகர்கள் இந்த போட்டியை பார்வையிட உள்ளனர்.

இந்த போட்டியை காண கூடும் கூட்டத்தில் யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதாக பரவி விடும். எனவே ஐபிஎல் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘ஐபிஎல் போட்டி நடக்கும்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். விசாரணையை 3-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »