Press "Enter" to skip to content

ரசிகர்கள் இல்லாமல் நடக்க போகும் ஐ.எஸ்.எல். இறுதிப்போட்டி

கோவாவில் நாளை நடக்கவுள்ள இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து இறுதிப்போட்டி ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி:

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடரில் கோவாவில் நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னையின் எப்.சி.-அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

இதேபோல் ஐ லீக் கால்பந்து போட்டி தொடரின் எஞ்சிய 28 ஆட்டங்களும் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட இருப்பதாகவும், இது குறித்து இன்று நடைபெறும் அகில இந்திய கால்பந்து சம்மேளன ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா உள்பட 2 டிவிசன் போட்டிகள் 2 வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »