Press "Enter" to skip to content

டிராவில் முடிந்த ரஞ்சி டிராபி இறுதி போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சவுராஷ்டிரா

ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ரஞ்சி டிராபி இறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா – பெங்கால் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கடந்த 9-ந்தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 425 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வசவாதா சிறப்பாக விளையாடி 106 ரன்கள் விளாசினார். பெங்கால் அணி சார்பில் ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் சுமார் இரண்டரை நாட்கள் பேட்டிங் செய்தன.

அதன்பின் பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் பெங்கால் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்திருந்தது. மஜும்தார் 58 ரன்களுடனும், நந்தி 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பெங்கால் அணி 71 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார்- நந்தி ஜோடி ஆட்டத்தை தொடங்கியது. பொட்டி டிரா என்பது உறுதியானதால் இன்னும் 71 ரன்கள் அடித்து முன்னிலை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருவரும் விளையாடினர். அதேவேளையில் எப்படியாவது 425 ரன்னுக்குள் சுருட்டிவிட வேண்டும் என சவுராஷ்டிரா அணி களம் இறங்கியது.

ஒருபக்கம் நந்தி நிலைத்து நின்று நம்பிக்கையுடன் பந்துகளை எதிர்கொண்டார். ஆனால் மறுமுனையில் மஜும்தார் 63 ரன்கள் எடுத்த நிலையில் உனத்கட் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அத்துடன் பெங்கால் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வரத்தொடங்கியது. ஆகாஷ் தீப் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட் ஆனார். முகேஷ் குமார் 5 ரன்னிலும், பொரேல் 1 ரன்னிலும் அவுட்டாக சவுராஷ்டிரா 381 ரன்னில் ஆல்அவுட் ஆனது. நந்தி 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் சவுராஷ்டிரா 44 ரன்கள் முன்னிலைப் பெற்றது. போட்டி டிரா ஆவது உறுதியானதால் சவுராஷ்டிரா அணி வெற்றி உறுதியானது. 44 ரன்கள் முன்னிலையுடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 34 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள ஒத்துக்கொண்டனர். இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.

இதனால் முதன் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன் மூன்று முறை சவுராஷ்டிரா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதன்பின் தற்போது முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »