Press "Enter" to skip to content

வீரர்கள் ‘சுயபரிசோதனை’ செய்து கொள்ள இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: பொல்லார்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் கிடைத்துள்ள இந்த இடைவெளியை கிரிக்கெட் வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர், சர்வதேச என அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக உலகளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அதிக அளவிலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள நேரத்தை தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் ஒயிட்-பால் கிரிக்கெட் அணி கேப்டன் பொல்லார்டு கூறுகையில் ‘‘கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு அதை வெளிப்படுத்துவற்கு சரியான நேரம். இந்த நேரத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், கிரிக்கெட் வாழ்க்கை முன்னோக்கி எடுத்துச்செல்ல நாம் விரும்புவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறிய காயம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை புறக்கணித்த நேரத்தில் உடற்தகுயில் கவனம் செலுத்தி அடுத்த தொடர்களுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன்” என்றார்.

வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூன் 4-ந்தேதியில் இருந்து விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொடர் நடைபெறுமா? என்பது சந்தேகமே…

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »