Press "Enter" to skip to content

கொரோனா சிகிச்சைக்காக 4 மாடி கட்டடத்தை வழங்கத் தயார்: இங்கிலாந்து குத்துச்சண்டை வீரர்

இங்கிலாந்து குத்துச்சண்டை வீரரான அமிர் கான், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனது நான்கு மாடி கட்டடத்தை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு உலகளவில் இதுவரை நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியோனோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் கோரோனா வைரஸ் தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பிரபலங்கள் மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகரிக்க நிதியுதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்தின் தொழில்முறை குத்துச்சண்டை வீரரான முன்னாள் உலக சாம்பியன் அமிர் கான் 60 ஆயிரம் சதுர அடி கொண்ட தனது நான்கு மாடி கட்டடத்தை கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வழங்க தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் மூன்று வாரங்கள் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »