Press "Enter" to skip to content

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடுதலை தொடங்குங்கள்: தேசிய விளையாட்டு பெடரேசன்களுக்கு ஐஓஏ வலியுறுத்தல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான மறுதேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான திட்டமிடுதலை தொடங்குங்கள் என தேசிய விளையாட்டு பெடரேசன்களை ஐஓஏ கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாக பெடரேசன் உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கென இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் உள்ளது. இதன் ஆலோசனைப்படி ஒலிம்பிக் போட்டிகளுக்கு அந்தந்த பெடரேசன் தயாராகும்.

ஒரு ஒலிம்பிக் தொடர் முடிந்த உடன் நான்கு ஆண்டுகள் கழித்து நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடல் தொடங்கிவிடும்.

அதன்படி 2016-ல் பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடருக்குப்பின் இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த பெடரேசன்கள் செய்து வந்தன. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு தள்ளி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான திட்டமிடுதலை மாற்றியமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான வேலையை உடனடியாக தொடங்குங்கள் என இந்திய ஒலிம்பிக் அசோசியேசன் தேசிய பெடரேசன்களை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியா சார்பில் தடகளம், வில்வித்தை, குத்துச்சண்டை, குதிரையேற்றம், ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம் விளையாட்டுகளில் இருந்து சுமார் 80 பேர் ஒலிம்பிக் போட்டிகயில பங்கேற்ற தகுதி பெற்றுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »