Press "Enter" to skip to content

ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கான டக்வொர்த் லீவிஸ் விதியை உருவாக்கியவர்களில் ஒருவர் காலமானார்

மழையால் போட்டி பாதிக்கப்படும்போது கையாளப்படும் டக்வொர்த் லீவிஸ் விதியை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் 78 வயதில் காலமானார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் மழையால் பாதிக்கப்பட்டால் ‘ரிசர்வ் டே’ என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டி தொடர்ந்து நடைபெறும். இதனால் நேரம் வீணாகுவதோடு ரசிகர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு டோனி லீவிஸ் – பிராங்க் டக்வொர்த்து ஆகியோர் ஒன்றிணைந்து ஒரு கணக்கு பார்முலாவை உருவாக்கினர். முதல் அணி எத்தனை ஓவர்கள் விளையாடுகிறது. எவ்வளவு ரன்கள் அடித்துள்ளது. எவ்வளவு விக்கெட்டுக்களை இழந்தது என்பதை கணக்கில் கொண்டு சேஸிங் அணிக்கு எவ்வளவு ரன்கள் இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கான பார்முலாவை இவர்கள் உருவாக்கினர்.

இந்த பார்முலாவை ஐசிசி ஏற்றுக்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லீவிஸ் என அதற்கு பெயரிட்டுள்ளனர்.

அதை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் 78 வயதில் காலமாகியுள்ளார். 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதி 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது மறைவுக்கு ஐசிசி இரங்கல் தெரிவித்துள்ளது.

2014-ல் டி20-க்கும் சேர்த்து அந்த விதியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்டெர்னின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லீவிஸ் ஸ்டெர்ன் விதி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »