Press "Enter" to skip to content

இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய விரும்பாத நியூசிலாந்து ‘ஏ’அணி

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாட இருக்கும் நியூசிலாந்து ‘ஏ’ அணி இதுவரை தனது திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மூலம் கிரிக்கெட் போட்டிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. கடைசியாக இந்தியா – நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரும், தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரும் நடைபெற்றன.

நியூசிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே கோடைக்கால கிரிக்கெட்டை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிரிக்கெட் போட்டி இனிமேல் எப்போது தொடங்கும் என்பது யாருக்கும் தெரியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் வீரர்களின் ஊதியத்தில் பிடித்தம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நியூசிலாந்து ‘ஏ’ அணி ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்து விளையாட இருக்கிறது. இந்தத் தொடரை தள்ளிப்போட விரும்பவில்லை என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் நியூசிலாந்து கிரிககெட் போர்டின் தலைமை நிர்வாகி டேவிட் கூறுகையில் ‘‘உண்மையிலேயே இந்த சூழ்நிலை விளையாட்டு போட்டியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமாக இருக்கும். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், நாம் விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில் சமூகத்தின் நலத்தையும் பார்க்க வேண்டும்.

நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு ஒரு அதிர்ஷ்டம். கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதற்கு முன் நாங்கள் கோடைக்காலத்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடிவிட்டோம். எனினும், தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கிரிக்கெட் சமூகம் படும் கஷ்டத்தை புரிந்துள்ளோம்.

நாங்கள் நியூசிலாந்து அரசின் ஊதிய மானிய திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளோம். இதனால் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த முடக்கத்தின்போது சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக ஜூன் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர்கள் நடப்பது சந்தேகம்தான். ஆனால் ஆகஸ்ட் மாதம் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான தொடரை இதுவரை ரத்து செய்யும் எண்ணம் ஏதும் இல்லை’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »