Press "Enter" to skip to content

வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் – பிரதமரின் வேண்டுகோளுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் ஆதரவு

கொரோனா வைரசை ஒழிக்க ஒன்றுபடும் வகையில், வீடுகளில் அகல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏற்றவேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆதரவு தெரிவித்துள்ளார்.

சோனிப்பட்:

கொரோனா வைரசை ஒழிக்க ஒன்றுபடும் வகையில் நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு பல விளையாட்டு நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா இது தொடர்பாக கூறியதாவது;-

வீடுகளில் மின் விளக்குகளை அனைத்து விட்டு அகல் விளக்குகளை 9 நிமிடங்கள் ஏற்றவேண்டும் என்று நமது பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 22-ந் தேதி மக்கள் ஊரடங்கை அனைவரும் ஒருங்கிணைந்து பின்பற்றியது போல் இதையும் கடைபிடிக்க வேண்டும். எனது குடும்பத்துடன் இணைந்து விளக்கு ஏற்ற உள்ளேன். நீங்களும் இதை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அரியானாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று இருந்தார். மேலும் உலக சாம்பியன் போட்டியில் 3 பதக்கம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் தேசாய் கூறும்போது, ‘கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடும் இந்த நேரத்தில் பிரதமர் விடுத்த வேண்டுகோளை ஏற்று அனைவரும் ஒன்றிணைவோம்.  நாளை அகல் விளக்கு ஏற்றி நமது ஒற்றுமை வெளிப்படுத்துவோம்‘ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »