Press "Enter" to skip to content

கொரோனா நிவாரணம் – பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் ரூ.7½ கோடி நிதியுதவி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் 7 ½ கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

ரியோடிஜெனிரோ:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அலற வைத்து இருக்கிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த பிரேசில் நாடும் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து தப்பவில்லை.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மார் 7.60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

ஐ.நா.வின் குழந்தைகள் நலநிதிக்கும், பிரேசிலை சேர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியானோ ஹக் என்பவர் நடத்தும் அறக்கட்டளைக்கும் இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டு இருக்கிறது. 

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் (பிரான்ஸ்) அணிக்காக விளையாடி வரும் 28 வயதான நெய்மார் உலகளவில் அதிக சம்பளம் பெறும் கால்பந்து வீரர்கள் வரிசையில் 3-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »