Press "Enter" to skip to content

இந்த நேரத்தில் கிரிக்கெட்டை தொடங்க வேண்டும்: பாகிஸ்தான் பயிற்சியாளர் சொல்கிறார்

தடைபட்டுள்ள கிரிக்கெட் போட்டிகள் மிகவிரைவில் தொடங்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 12-ந்தேதிக்குப்பின் போட்டிகள் நடைபெறாததால் வீரர்கள் சுமார் இரண்டு மாதம் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அதேவேளையில் மக்கள் கொரோனா செய்திகளை மட்டுமே கேட்டுக்கொண்டு மழு அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விரைவில் கிரிக்கெட் போட்டிகளை தொடங்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘தற்போதைய சூழ்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள். ஒவ்வொருவடைய ஆரோக்கியமும் முக்கியமானது. அதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால், வெறிச்சோடிய மைதானத்தில் சரியான பாதுகாப்பு நடைமுறையுடன் போட்டிகளை நடத்த முடியும். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை.

தற்போது எல்லோரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள். இந்த நேரத்தில் சில போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பினால் மக்கள் வீட்டிற்குள் இருந்து போட்டிகளை ரசிக்க முடியும். அவர்களுக்கு இது சிறப்பானதாக இருக்கும்.

வெறும் கொரோனா செய்திகளை மட்டுமே பார்த்துக் கொண்மு வீட்டில் இருப்பதன் மூலம் மக்கள் சோர்வடைந்து போவதுடன் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் விளையாட்டுகள் தொடங்கப்பட்டால், கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கினால் மக்கள் வீட்டில் இருந்து கொண்டே போட்டியை ரசிக்க முடியும். இது அவர்களுக்கு சிறந்த ஆறுதலை கொடுக்கும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »