Press "Enter" to skip to content

பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக்: இத்தாலி அரசு

ஒட்டுமொத்த பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்ட பிறகு ‘செர்ரி ஏ’ கால்பந்து தொடர் நடத்தப்படும் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் கோரத்தாண்டம் ஆடிய முக்கியமான நாடுகளில் இத்தாலியும் ஒன்று. தற்போது சுமார் இரண்டு மாதத்திற்குப்பின் கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.

இதனால் விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இத்தாலியின் நம்பர் ஒன் கால்பந்து லீக்கான ‘செர்ரி ஏ’ மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2-வது வாரத்திற்குப் பிறகு கடந்த 4-ந்தேதியில் இருந்து கால்பந்து வீரர்கள் தனித்தனியே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடுமையான நிபந்தனைகளுக்கு இடையில் வருகிற 18-ந்தேதியில் இருந்து ஒரு அணியாக பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக் தொடங்கும் என இத்தாலி விளையாட்டுத்துறை மந்திரி வின்சென்ஜோ ஸ்பாடாஃபோரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வின்சென்ஜோ ஸ்பாடாஃபோரா கூறுகையில் ‘‘மீண்டும் ‘செர்ரி ஏ’ லீக் தொடங்கும் என்று நாங்கள் எல்லோரும் நம்புகிறோம். ஏனென்றால் போட்டி நடைபெறுவதற்கு பொறுத்தமான நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகளை குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஒரு வீரருக்கு பாசிட்டிவ்  ஏற்பட்டால் ஒட்டுமொத்த அணியும் தனிமைப்படுத்தப்படும் என்று கூறும்போது, கேஷியருக்கு பாசிட்டிவ் என்றால், சூப்பர் மார்க்கெட் ஏன் மூடப்படுவதில்லை என்று யாரோ ஒருவர் கேட்கலாம்.

கால்பந்து போட்டியில் சமூக இடைவெளியோடு வீரர்கள் விளையாடுவதற்கு சாத்தியமில்லை. வீரர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு ஓட வேண்டும். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் இந்த சூழ்நிலை ஏற்படாது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »