Press "Enter" to skip to content

ஜூன் 1-ந்தேதி பயிற்சியை தொடங்க இலங்கை கிரிக்கெட் அணி திட்டம்

வேகப்பந்து வீச்சாளர்களுடன் வரும் 1-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 1-ந்தேதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும்வோம் என்று, அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

‘‘கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர், கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் திட்டத்தை பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன்.

முதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால், ஒருமுறை பந்து வீசிய பின்னர், மீண்டும் பந்து வீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள்’’ என்றார்.

பொது ஊரடங்கு காரணமாக மிக்கி ஆர்தர் சொந்த நாடு திரும்ப முடியாமல் இலங்கையிலேயே தங்கியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »