Press "Enter" to skip to content

போதை பொருள் கடத்தியதாக இலங்கை வீரர் கைது: பணியிடைநீக்கம் செய்கிறது கிரிக்கெட் போர்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் ஷெஹன் மதுஷங்கா ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஷெஹன் மதுஷங்கா. 25 வயதாகும் இவர் 2018-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். வங்காளதேசத்திற்கு எதிரான இந்த முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்தார்.

நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு கிராம் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்ததாக ஷெஹன் மதுஷங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். தீவிர விசாரணைக்குப்பின் நேற்று வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஷெஹன் மதுஷங்காவை இரண்டு வாரங்கள் ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வலது கை வேகப்பந்து வீச்சாளரான ஷெஹன் மதுஷங்கா வங்காளதேசத்திற்கு எதிராக 2018-ல் இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பின்னர் காயத்தால் விளையாடாமல் உள்ளார். ஷெஹன் மதுஷங்கா மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தில் இருந்து அவரை நீக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »