Press "Enter" to skip to content

ஜெர்மன் கோப்பை வென்றது பேயர்ன் முனிச் கால்பந்து அணி

ரசிகர்கள் இன்றி நடைபெற்ற ஜெர்மன் கோப்பை இறுதிப் போட்டியில் பேயர் முன்னிச் 4-2 என ரெவர்குசன் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

ஜெர்மனி கால்பந்து கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்றிரவு ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. இதில் முன்னணி அணியான பேயர்ன் முனிச் – பேயர் லெவர்குசன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பேயர்ன் முனிச் அணி 4-2 என வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் பேயர்ன் முனிச் ஜெர்மன் கோப்பையை 20-வது முறையாக வென்றுள்ளது. மேலும், லீக் மற்றும் ஜெர்மன் கோப்பை ஆகியவற்றை ஒரே ஆண்டில் 13 முறையாக கைப்பற்றியுள்ளது.

ரசிகர்கள் இல்லாமல் கோப்பையை வென்றது குறித்து பேயர்ன் முனிச் அணியின் முன்னணி வீரர் தாமஸ் முல்லர் கூறுகையில் ‘‘சிறப்பான ஸ்டேடியத்தில் ஜெர்மன் கோப்பையை வெல்லும்போது ரசிகர்கள் இல்லாதது சற்று கவலை அளிக்கிறது. வெற்றிக்கோப்பையை ஏந்தும்போது இந்த கவலை ஏற்பட்டது. இது லேசான காயத்தை ஏற்படுத்தியது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »