Press "Enter" to skip to content

ஆதாயம் தரும் இரட்டை பதவி: விராட் கோலிக்கு எதிராக கிரிக்கெட் வாரியத்திடம் புகார்

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு எதிராக ஆதாயம் தரும் இர்டை பதவி வகிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுளளது.

இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் வீராட் கோலி. விளையாட்டு மட்டுமின்றி விளம்பரம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களில் அதிக வருவாய் ஈட்டுபவராக இருக்கிறார்.

விராட் கோலி இரு நிறுவனங்களின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிறுவனம் லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட்,  ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்களுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் வைத்துள்ளது. இதன் காரணமாக வீராட் கோலி மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி  புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயினிடம் இதுதொடர்பாக  புகார் அளித்து உள்ளார். இவர் ஏற்கனவே தெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் மீது இதே மாதிரியான புகாரை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயின் கூறியதாவது:-

விராட் கோலி மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும். ஒருவேளை இது உண்மையானால் கோலிக்கு இதுபற்றி பதிலளிக்க அளிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »