Press "Enter" to skip to content

3 நாடுகள் விருப்பம்: ஐ.பி.எல்.-ஐ வெளிநாட்டில் நடத்துவது கடைசி கட்ட முயற்சி மட்டுமே- பிசிசிஐ

வெளிநாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தும் என்ற பேச்சு பிசிசிஐ-யின் கடைசி கட்ட முயற்சி என்று பொருளாளர் துமல் தெரிவித்துள்ளார்.

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை கடந்த மார்ச் 29-ந்தேதி முதல் மே மாதம் 23-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) காலவரையின்றி ஒத்திவைத்தது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் இந்த போட்டியை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் பி.சி.சி.ஐ. இருக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல்.லை நடத்த பி.சி.சி.ஐ. தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் ஐ.சி.சி. முடிவு எடுப்பதில் தாமதித்துள்ளது. இதுகுறித்து விரைவில் முடிவை அறிவிக்கிறது. 20 ஓவர் உலககோப்பை தள்ளிவைக்கப்பட்டு ஐ.பி.எல் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐ.பி.எல். லை வெளிநாட்டில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் ஐ.பி.எல் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஐ.பி.எல்.20 ஓவர் போட்டியை வெளிநாட்டில் நடத்துவது கடைசி கட்ட முயற்சி மட்டுமே என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் அருண் துமல் கூறியதாவது:-

ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் நடத்தவே விரும்புகிறோம். இங்குதான் முழு முன்னுரிமை. அதன் பிறகுதான் வெளிநாடுகள் பற்றி சிந்திக்க வேண்டும். 3 நாடுகள் இதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் ஐ.பி.எல்.ஐ நடத்துவது என்பது கடைசி கட்ட முயற்சி மட்டுமே. அடுத்த ஐ‌.பி.எல் ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

20 ஓவர் உலக கோப்பை குறித்து இன்னும் முடிவு தெரியவில்லை. இந்த நிச்சயமற்ற நிலையால் ஒவ்வொருவரும் மன அழுத்தத்தில் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »