Press "Enter" to skip to content

உங்கள் வழியில் செயல்படுங்கள்: ஜோ ரூட்டின் அறிவுரை இதுதான்- பென் ஸ்டோக்ஸ் சொல்கிறார்

கேப்டன் பொறுப்பில் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்ற ஒரு வரிதான் ஜோ ரூட்டின் அட்வைஸ் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் இன்று தொடங்குகிறது. 3 மணிக்கு சுண்டப்பட வேண்டிய டாஸ் மழையால் தடைபட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் முதன்முதலாக கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். வழக்கமான கேப்டன் ஜோ ரூட் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்ற ஒரு வரியைத்தான் அட்வைஸாக கூறினார் என்று பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘நேற்று போட்டோ எடுக்கும் முன் ஜோ ரூட்டிடன் சிறந்த தகவலை பெற்றேன். ஜோ ரூட் அந்த மெசேஜில் ‘உங்கள் வழியில் செயல்படுங்கள்’ என்று கூறியிருந்தார்.

ஜோ ரூட்டின் தனிப்பட்ட காரணத்தால், அவர் இல்லாமல் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நான் அவருடன் இருக்க முடியாத சூழ்நிலை. இருந்தாலும் அவர் போட்டியை பார்த்துக் கொண்டிருப்பார். எனக்குத் தேவை என்றால் எப்போது வேண்டுமென்றாலும் அவரை போன் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்பது எனக்குத் தெரியும்.

2015-ம் உலக கோப்பைக்குப்பின் நாங்கள் ஒருநாள் அணியை எப்படி கட்டமைக்க திட்டமிட்டமோ அதேபோல், டெஸ்ட் அணியையும் ஆஷஸ் மற்றும் இந்தியா தொடருக்காக கட்டமைக்க இருக்கிறோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »