Press "Enter" to skip to content

ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த விருப்பம் தெரிவித்தோமா?: நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு விளக்கம்

ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த விருப்பம் தெரிவித்ததாக வந்த செய்தி யூகம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளி வைக்கப்பட இருப்பதால் அந்த நேரத்தில் நடத்த பிசிசிஐ விரும்புகிறது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் வெளிப்படைய எங்கள் நாட்டில் ஐபிஎல் தொடரை நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தன.

கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்று எதிர்த்து வெற்றி கண்ட நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.

அப்போதுதாதான் இலங்கை, ஐக்கிய அமீரகம், நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால் தொடரை இந்தியாவில் நடத்த நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். கடைசி கட்ட முயற்சிதான் வெளிநாடு என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்தார். பிசிசிஐ தலைவர் கங்குலியும் அதை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் நாங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வந்த செய்திகள் யூகத்தின் அடிப்படையானது என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

‘‘நாங்கள் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தோம் என்ற செய்தி யூகமானது. நாங்கள் அப்படி ஒரு விருப்பத்தை தெரிவிக்கவும் இல்லை. அப்படியான அணுகுமுறை எண்ணமும் இல்லை’’ என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டடின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »